இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் ஏற்படும் வாய்ப்புகள் கனிந்துள்ளன. இந்த நிலையில் பனாமா சிட்டியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியும், கியூபா வெளியுறவு அமைச்சர் புருனோ ரோட்ரிகியூசும் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின. அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோவும் நேற்று பேச்சு வார்த்தையை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.