Home நாடு ஊடுருவல்காரர்களால் காவல்துறை அதிகாரியின் தலை துண்டிக்கப்பட்டதா?

ஊடுருவல்காரர்களால் காவல்துறை அதிகாரியின் தலை துண்டிக்கப்பட்டதா?

762
0
SHARE
Ad

interphoto_1361432636செம்பூர்ணா, மார்ச் 4 –  செம்பூர்ணா, கம்போங் ஸ்ரீ ஜெயா சிமுனுலில் கடந்த சனிக்கிழமை ஊடுருவல்காரர்களுடன் நடந்த சண்டையில் ஒரு காவல்துறை அதிகாரியின் தலை துண்டிக்கப்பட்டதாக உத்துசான் மலேசியா வெளியிட்டு இருந்த செய்தி பற்றி பொது காவல்துறைக் கண்காணிப்பாளர் இஸ்மாயில் ஓமரிடம் இன்று லகாட் டத்துவில் செய்தியாளர்கள் பேசிய உரையாடல் பின்வருமாறு:

செய்தியாளர்:  காவல்துறை அதிகாரி ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறதே, அது உண்மையா?

இஸ்மாயில்: எங்களுக்குத் தெரியாது.

#TamilSchoolmychoice

செய்தியாளர்: நேற்றே பிண ஆய்வு அறிக்கையை பார்க்கப்போவதாகச்  சொன்னீர்களே, அது உண்மையா?

இஸ்மாயில்: காவல்துறை இன்னும் அந்த ஆய்வு அறிக்கையைப் பார்க்கவில்லை. நானும் இன்னும் பார்க்கவில்லை.

மேலும் ஊடுருவல்காரர்களிடம் சிக்கிய மற்றுமொரு காவல்துறை அதிகாரி கத்தியால் குத்தப்பட்டு, தீயிட்டுக்கொளுத்தப்பட்டு இருக்கிறார் என்ற செய்தியை உத்துசான் மலேசியா வெளியிட்டு இருந்தது.கடந்த சனிக்கிழமை, ஸ்ரீ ஜெயா சிமுனுல் என்ற கிராமத்தில் ஆயுதம் ஏந்திய கும்பல் நடமாடுவதாகக் கேள்விப்பட்டு அதை ஆராய்வதற்காகச் சென்ற காவல்துறை அதிகாரிகளை ஊடுருவல்காரர்கள் பதுங்கியிருந்து தாக்கியுள்ளனர்.

நேற்று அப்பகுதியில் காவல்துறை மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் ஆறு அதிகாரிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு ஆறு உடல்கள் கிடைத்துள்ளன. அவை ஊடுருவல்காரர்களின் உடல்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.