Home நாடு “போதிய விளக்கம் அளித்து விட்டார் பிரதமர் – முடிவுக்கு வர வேண்டியது மக்கள்தான்” : டாக்டர்...

“போதிய விளக்கம் அளித்து விட்டார் பிரதமர் – முடிவுக்கு வர வேண்டியது மக்கள்தான்” : டாக்டர் சுப்ரா

572
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 12 – தம் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பிரதமர் உரிய விளக்கங்களை அளித்துள்ளார் என்றும், இனி அவரது தலைமைத்துவம் குறித்து பொதுமக்கள் தான் ஒரு கருத்துக்கு வர வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சரும் மஇகா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

articless-subramaniam1-020713_600_398_100பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் உரிய கருத்துக்களை கூறி தெளிவுபடுத்தி உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இனி நஜிப்பின் நிர்வாகம் குறித்து நாட்டு மக்கள் கருத்து உருவாக்கத்திற்கு முன்வர வேண்டும் என்றார்.

இந்திய சமுதாயத்தை அதிகம் செவிமெடுத்த பிரதமராக நஜிப் விளங்கி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“எனக்கு தெரிந்த வரையில் மலேசியாவில் உள்ள இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக ஏராளமான ஒதுக்கீடுகளை பிரதமர் நஜிப் செய்துள்ளார். உதாரணமாக, அதிக நிர்வாக குறுக்கீடுகள் இன்றி தமிழ்ப் பள்ளிகளுக்கு பல மில்லியன் ரிங்கிட் ஒதுக்கியுள்ளார்,” என்று டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

மகாதீர் உட்பட பல்வேறு தரப்பினரும் எழுப்பிய கேள்விகளுக்கு கடந்த வியாழக்கிழமை பிரதமர் நஜிப் தமது தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் உரிய விளக்கம் அளித்திருந்தார். அது குறித்து கருத்து தெரிவித்தபோதே டாக்டர் சுப்ரா இவ்வாறு கூறினார்.