Home உலகம் பிரேசில் அதிபரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

பிரேசில் அதிபரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

725
0
SHARE
Ad

Protest against Brazilian President Dilma Rousseffரியோ டி ஜெனிரோ, ஏப்ரல் 13 – பிரேசிலில் அதிபரை பதவியை விட்டு விலக  வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர்  அதிபருக்கு எதிராக போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர். பிரேசில் அதிபராக தில்மா ரூசோ உள்ளார்.

அவர் தனது பதவியை பயன்படுத்தி பல்வேறு தரபபட்ட ஊழலில் ஈடுபட்டுள்ளது தெரிய  வந்துள்ளது. அவர் செய்த ஊழல்கள் வெளியாகி மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்பத்தியுள்ளது.

Protest against Brazilian President Dilma Rousseffஊழல் காரணமாக அவர் பதவி விலகக் கோரி  ஏராளமானோர் ரியோ டி ஜெனிரோவில் போராட்டங்களை மேற்கொண்டனர். இதில் நாடு முழுவதும் அதிபர் குறித்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

Protest against Brazilian President Dilma Rousseffஇதில் பலர் அதிபரை குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும்,  அவரை உடனே பதவி விலகச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதில் அந்நாட்டு மக்கள் அதிபருக்கு எதிரான பெரும் போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

Protest against Brazilian President Dilma Rousseffபோராட்டத்தில் அதிபருக்கு எதிராக கண்டன குரல்களை எழுப்பியும், பதாகைகளை ஏந்தியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த போராட்டத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிரேசில் நாட்டில் சுமார் 64 சதவீத மக்கள் அதிபரை பதவி விலக  கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.