Home கலை உலகம் சினேகா கர்ப்பமாக உள்ளார் – டுவிட்டரில் பிரசன்னா தகவல்!

சினேகா கர்ப்பமாக உள்ளார் – டுவிட்டரில் பிரசன்னா தகவல்!

797
0
SHARE
Ad

snehaசென்னை, ஏப்ரல் 15 – 2012-ல் காதல் திருமணம் செய்துகொண்ட சினேகா – பிரசன்னா ஜோடிக்கு விரைவில் குழந்தை பிறக்கவுள்ளது. இதனை பிரசன்னா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்தார்.

பிரசன்னா தன்னுடைய மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், விரைவில் எங்கள் வீட்டில் மூன்றாவது உறுப்பினர் சேரவிருக்கிறார் என்றும் டுவீட் செய்திருக்கிறார். பின்னர் இணையத்தில் பல பிரபலங்கள் இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

சினேகாவும் பிரசன்னாவும் “அச்சமுண்டு அச்சமுண்டு” படத்தில் இணைந்து நடித்தனர். பின்னர் இருவருக்கும் காதல் பூக்க, பெற்றோர்களின் சம்மதத்துடன் 2012-ஆம் ஆண்டு மே11-ல் திருமணம் செய்துகொண்டனர். குட்டி சினேகாவா இல்லை குட்டி பிரசன்னாவா என்று எதிர்பார்ப்புகள் வலுத்துள்ளன.