Home நாடு அஸ்ட்ரோ ‘தடம்’ தொடக்க விழாவில் தமிழ் ஊடக சேவையாளர்களுக்கு அங்கீகாரம்

அஸ்ட்ரோ ‘தடம்’ தொடக்க விழாவில் தமிழ் ஊடக சேவையாளர்களுக்கு அங்கீகாரம்

711
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 18 – தலைநகர் பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் அரங்கில், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி நடைபெற்ற அஸ்ட்ரோவின் “தடம்” தொலைக்காட்சித் தொடர் தொடக்க விழாவில் மலேசியத் தமிழ் நாளேடுகளின் ஆசிரியர்களுக்கும், ஊடகத் துறையைச் சேர்ந்த தமிழ் சேவையாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் பொருட்டு, சிறப்பு செய்யப்பட்டு நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.

“தடம்” அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே தனது கைவண்ணத்தை வேகத்துடன் காட்டி தமிழகத்தின் மகாபலிபுரம் கடற்கரைக் கோயிலின் ஓவியத்தை அனைவரின் முன்னாலும் வரைந்து அசத்திய ஓவியர் டாக்டர் சந்திரனுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

IMG_9501

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சியை மலேசியாவுக்கான இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி அதிகாரபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு செய்யப்பட்ட தமிழ் சேவையாளர்கள் பின்வருமாறு:

IMG_9388

எம்.எஸ்.மலையாண்டி – ஆசிரியர், மலேசிய நண்பன் நாளிதழ் (குறிப்பு: எம்.எஸ்.மலையாண்டி சார்பில் அவரது பிரதிநிதி பெற்றுக்கொள்கின்றார்)

IMG_9396

எம்.இராஜன் – ஆசிரியர், மக்கள் ஓசை நாளிதழ்

IMG_9407

கே.பத்மநாபன் – ஆசிரியர், தமிழ் நேசன் நாளிதழ்

unnamed (1)

பி.ஆர்.இராஜன் – ஆசிரியர், தினக்குரல் நாளிதழ்

IMG_9413

வித்யாசாகர் – ஆசிரியர், நம்நாடு நாளிதழ்

IMG_9415

சின்னராசு – ஞாயிறு பதிப்பாசிரியர், தமிழ் மலர் நாளிதழ்

IMG_9419

ஐ.எஸ்.தமிழ்ச் செல்வன் – ஆசிரியர், தாய்மொழி நாளிதழ்

IMG_9420

சுப்ரமணியம் வீராசாமி (சுப்ரா) – டிஎச்ஆர் ராகா வானொலி பொறுப்பாளர்

IMG_9429

எஸ்.குமரன் – மின்னல் பண்பலை பொறுப்பாளர்

IMG_9432

ஸ்ரீ பத்மநாபன் – அஸ்ட்ரோ வியூ இணையப் பதிப்பகத்தின் தலைமைச் செயலாக்க அதிகாரி

IMG_9449

முத்து நெடுமாறன் – முரசு அஞ்சல் மென்பொருள் உருவாக்குநர், வடிவமைப்பாளர்