Home நாடு பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: இருவரைப் பரிசீலிக்கும் பிகேஆர்!

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: இருவரைப் பரிசீலிக்கும் பிகேஆர்!

590
0
SHARE
Ad

புக்கிட் மெர்தாஜம், ஏப்ரல் 19 – பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதில் பிகேஆர் மும்முரமாக உள்ளது. இறுதியாக இருவரது பெயர்களைப் பரிசீலித்து வருவதாக பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா தெரிவித்துள்ளார்.

Wan-Azizah“வேட்பாளர் தேர்வு தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வாரின் சம்மதத்தை அவரது வழக்கறிஞர்கள் மூலம் பெற்றுள்ளோம். மேலும் கட்சியின் ஒருமித்த கருத்தின் அடிப்படையிலும் வேட்பாளர் தேர்வு முடிவாகும். ஏப்ரல் 24ஆம் தேதி வேட்பாளரை அறிவிப்போம்” என்று சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறினார் வான் அசிசா.

ஓரினப் புணர்ச்சி வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றதால் பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் நாடாளுன்ற உறுப்பினராக இருந்த அன்வாரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எதிர்வரும் மே 7ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.