Home நாடு பெர்மாத்தாங் பாவ் ஒருங்கிணைப்பாளரா? – லோகா பாலமோகன் விளக்கம்

பெர்மாத்தாங் பாவ் ஒருங்கிணைப்பாளரா? – லோகா பாலமோகன் விளக்கம்

648
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன், ஏப்ரல் 15 – அடுத்த மாதம் மே 7ஆம் தேதி நடைபெறவிருக்கும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்களுக்கு ஒருங்கிணைப்பாளராக கூட்டரசுப் பிரதேச துணையமைச்சரும், பிபிபி கட்சியின் பினாங்கு மாநிலத் தலைவருமான டத்தோ லோகா பாலமோகன் (படம்) நியமிக்கப்பட்டிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

Loga Bala Mohan 2இதனைத் தொடர்ந்து இன்றைய தமிழ் நாளேடுகளில் விடுத்த அறிக்கையொன்றில், லோகா பாலமோகன் “நான் ஒருங்கிணைப்பாளர் அல்ல. வெறும் அனுசரணையாளன்தான்” என விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது இந்திய வாக்காளர்களை தேசிய முன்னணி பக்கம் கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டியவர் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.

இருப்பினும், பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் உள்ள 4,500க்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்களுக்கு பொறுப்பாளராகவோ, ஒருங்கிணைப்பாளராகவோ செயல்படப் போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படியானால், இந்த தொகுதியின் இடைத் தேர்தலில் மஇகாவின் பங்கும், பொறுப்பும் என்ன என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது.

#TamilSchoolmychoice

“நான் ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்படவில்லை” என்றும் எழுந்த சர்ச்சையால் தன்னிலை விளக்கம் அளிப்பதாகவும் லோகா பாலமோகன் கூறியிருக்கின்றார்.

இருப்பினும் லோகா பாலமோகனின் நியமனம் குறித்து மஇகா வட்டாரங்களில் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

பேராக் மாநிலத்தின் முன்னாள் தலைவரும், சிறிது காலம் பினாங்கு மாநிலத்தின் இடைக்காலத் தலைவராகப் பணியாற்றியவருமான டத்தோ ஜி.ராஜூ இந்த முடிவு மஇகாவின் கன்னத்தில் விழுந்த அறை என்று வர்ணித்துள்ளார்.

இதற்கிடையில் மஇகா பினாங்கு மாநில தொடர்புக் குழுவின் துணைத் தலைவரும், மஇகா பாகான் தொகுதித் தலைவருமான டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம் லோகா பாலமோகன் நியமனம் குறித்து மஇகாவின் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.