Home கலை உலகம் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது!

616
0
SHARE
Ad

spb_award_002கேரளா, ஏப்ரல் 18 – தனது குரலால் பல்லாயிரக்கணக்கான மக்களை கவர்ந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கேரள அரசின் ஹரிவராசனம் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பலமொழிகளில் பாடி பிரபலமானவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். சினிமா பாடல்கள் மட்டுமின்றி பக்தி பாடல்களும் பாடியுள்ளார். குறிப்பாக சபரிமலை ஐயப்பனுக்கும் பாடல்கள் பாடியுள்ளார்.

எம்ஜிஆர், சிவாஜி காலம் தொடங்கி தற்போது வரை பாடல் பாடி வருகிறார். இந்நிலையில் இவருக்கு கேரள அரசின் ஹரிவராசனம் விருது வழங்கப்படவுள்ளது. சபரிமலை நடுவர் குழுவினரான உயர் தலைவர் கே ஜெயக்குமார், வி எஸ் சிவகுமார் ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice