Home இந்தியா நாடு திரும்பிய ராகுல் காந்தி விவசாயிகளைச் சந்தித்தார்!

நாடு திரும்பிய ராகுல் காந்தி விவசாயிகளைச் சந்தித்தார்!

542
0
SHARE
Ad

India's Congress party vice-president Rahul Gandhi (C) during an interaction with farmers outside his residence in New Delhi, India, 18 April 2015. After returning from a two-month political break, Rahul Gandhi met farmers from the states of Uttar Pradesh, Punjab, Rajasthan and Haryana.  புதுடெல்லி, ஏப்ரல் 19 – கடந்த இரண்டு மாதங்களாக, எங்கேயும் காணவில்லை – வெளிநாட்டில் இருக்கின்றார் – உடல் நிலை சரியில்லை – புதிய அரசியல் பாடம் படித்து வருகின்றார் – என்றெல்லாம் பல்வேறு ஊகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் வித்திட்ட காங்கிரஸ் கட்சியின் உதவித் தலைவர் ராகுல் காந்தி நாடு திரும்பியுள்ளார்.

நேற்று புதுடில்லியில், தனது இல்லத்தில், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களிலிருந்து வருகை தந்திருந்த விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதிலிருந்து மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமாக இயங்க அவர் முடிவெடுத்திருக்கின்றார் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கின்றார்.

#TamilSchoolmychoice