Home இந்தியா 3 முறை ஒடிசா முதல்வராக இருந்த ஜே.பி.பட்னாயக் காலமானார்!

3 முறை ஒடிசா முதல்வராக இருந்த ஜே.பி.பட்னாயக் காலமானார்!

515
0
SHARE
Ad

J_B_Pattnaik,_Governor_of_Assamஒடிசா, ஏப்ரல் 21 – ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்னாயக் திருப்பதியில் காலமானார். திருமலையில் ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனையடுத்து திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜே.பி. பட்னாயக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் 18-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்னாயக்கின் உடல் வித்யா பீடத்தில் மாணவர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பட்னாயக்கின் மறைவை அடுத்து பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஜே.பி.பட்னாயக் ஒடிசா மாநில முதல்வராக 3 முறை பதவி வகித்துள்ளார். 2009-ஆம் ஆண்டு வரை அசாம் மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.