Home உலகம் பாரில் பீர் குடித்து சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்!

பாரில் பீர் குடித்து சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய பிரதமர்!

509
0
SHARE
Ad

rsz_austr_pmஆஸ்திரேலியா, ஏப்ரல் 21 – ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் சமீபத்தில் மது பாரில் பீர் குடித்த காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர் சிட்னியில் உள்ள மது பாரில் தனது டம்ளரில் ஊற்றப்பட்ட 425 மி.லி. பீரை 6 வினாடிகளில் ஒரே மூச்சில் குடித்து முடித்தார்.

இது சமூக வலைதளங்களில் விவாத பொருளாகி விட்டது. அதாவது கடந்த 1983 முதல் 1991 வரை பிரதமராக இருந்த பாப்ஹாவ்க்கும், டோனி அப்போட்டுக்கும் பீர் குடிக்கும் போட்டி வைத்தால் யார் முதலில் குடித்து முடிப்பார்கள் என்று விவாதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த போது ஆஸ்திரேலிய கால்பந்து அணியின் பயிற்சியாளர் சைமன் கார்டல் வீரர்களுக்கு மது விருந்து அளித்து கொண்டிருந்தார்.

#TamilSchoolmychoice

அப்போது அந்த வழியாக வந்த பிரதமர் டோனி அபோட்டை சந்தித்து தங்களுடன் மது விருந்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கொண்ட இவர் ஒரே மூச்சில் பீர் குடித்ததை காணொளி எடுத்து வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டனர்.