Home இந்தியா அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் போர் கப்பல் மும்பையில் நேற்று அறிமுகம்!

அதிநவீன ஆயுதங்களுடன் ஐஎன்எஸ் போர் கப்பல் மும்பையில் நேற்று அறிமுகம்!

662
0
SHARE
Ad

INS-Visakhapatnam,மும்பை, ஏப்ரல் 21 – அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் மும்பையில் நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர் கப்பல் அறிமுக விழா நேற்று நடந்தது.

கடற்படை தளபதி ஆர்.கே.தோவானின் மனைவி மினு தோவான் கப்பலை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் கடற்படை தளபதி ஆர்.கே.தோவான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடலில் கப்பல் மிதக்க விடப்பட்டது.

INS-Visakhapatnamஇக்கப்பல் 163 மீட்டர் நீளமும், 7,300 டன் எடையும் கொண்டது. மணிக்கு 30 கடல் மைல் வேகத்தில் செல்லக் கூடியது. இக்கப்பலில் அதிநவீன போர்க் கருவிகள், சென்சார் கருவிகள், தகவல் தொடர்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

தரையிலிருந்து கடலில் உள்ள இலக்கை தகர்க்கக் கூடிய சூப்பர்சானிக் ஏவுகணைகள் இக்கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், விமான எதிர்ப்பு பீரங்கிகளும், ஏவுகணைகளும் பொருத்தப்பட்டு உள்ளதால் வான்வழி பாதுகாப்பையும் இது உறுதி செய்கிறது.

இதுதவிர ராக்கெட் லாஞ்சர்களும் பொருத்தப்பட்டுள்ளதால், நீர்மூழ்கிக் கப்பல்களையும் தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை படைத்தவை. இக்கப்பல் 2018-ஆம் ஆண்டு கடற்படையில் இணைக்கப்படும்.

20navyபீ15-பி ரக போர் கப்பல் வரிசையில் தொடங்கப்பட்டுள்ள முதல் கப்பல் இது. ஏற்கனவே பீ15-ஏ கொல்கத்தா என்ற போர் கப்பலை இந்தியா உருவாக்கியுள்ளது.

அதன் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம். மசாகான் கப்பல் கட்டும் தளத்தில் மேலும் 4 போர் கப்பல்கள், 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.