Home நாடு ரொம்பின் இடைத்தேர்தல்: பாஸ் வேட்பாளராக நஸ்ரி அகமட் அறிவிப்பு!

ரொம்பின் இடைத்தேர்தல்: பாஸ் வேட்பாளராக நஸ்ரி அகமட் அறிவிப்பு!

469
0
SHARE
Ad

ரொம்பின், ஏப்ரல் 21 – எதிர்வரும் மே 5-ம் தேதி நடைபெறவுள்ள ரொம்பின் தொகுதி இடைத்தேர்தலில் பாஸ் வேட்பாளராக பகாங் மாநில பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் நஸ்ரி அகமட் (வயது 40) அறிவிக்கப்பட்டுள்ளார்.

rompin_by-election_signpost_200_200_100

கடந்த ஏப்ரல் 18-ம் தேதி, தேசிய முன்னணி சார்பில் ரொம்பின் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக டத்தோ ஹசான் அரிபின் (வயது 63) அறிவிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

ஹசான் தற்போது அத்தொகுதியின் இடைக்கால அம்னோத் தலைவராக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் 4-ம் தேதி செமினி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ரொம்பின் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்சிஸ் உயிரிழந்ததைத் அடுத்து அவரது தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.