Home நாடு ரொம்பினில் குறைந்த பெரும்பான்மை கிடைத்ததற்கு நான் பொறுப்பல்ல – மகாதீர்

ரொம்பினில் குறைந்த பெரும்பான்மை கிடைத்ததற்கு நான் பொறுப்பல்ல – மகாதீர்

462
0
SHARE
Ad

புத்ராஜெயா, மே 6 – நேற்று நடைபெற்று முடிந்த ரொம்பின் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி குறைந்த பெரும்பான்மையில் தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளதற்கு தான் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

Dr Mahathir

இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மகாதீர், “அங்கு (ரொம்பின்) ஜிஎஸ்டி, அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுகள், பொருட்கள் விலை உயர்வு மற்றும் இதற்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் 1எம்டிபி (1 மலேசியா டெவலப்மெண்ட் பெர்காட்) ஆகியவை முக்கிய பிரச்சனையாக உள்ளது.”

#TamilSchoolmychoice

“கம்போங் மக்களால் (கிராமப்புறம்) 1எம்டிபி விவகாரம் பற்றி புரிந்து கொள்ள முடியாது. 42 பில்லியன் கடன்களைப் பற்றி அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ரொம்பின் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹசான் ஆரிஃபின் 23,796 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஸ் வேட்பாளர் நஸ்ரி அகமட்டை  8,895 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

கடந்த 13-வது பொதுத்தேர்தலை ஒப்பிடுகையில், ரொம்பின் தொகுதியில் நேற்று தேசிய முன்னணிக்கு கிடைத்த பெரும்பான்மை மிகக் குறைவாகும்.

கடந்த 2013 பொதுத் தேர்தலில் மறைந்த டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்ஜிஸ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பாஸ் மகளிர் அணித் தலைவி நூரிடா முகமட் சாலேவை, சுமார் 15,114 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.