Home நாடு ரொம்பின் இடைத்தேர்தல்: குறைந்த பெரும்பான்மையில் தேமு வெற்றி!

ரொம்பின் இடைத்தேர்தல்: குறைந்த பெரும்பான்மையில் தேமு வெற்றி!

749
0
SHARE
Ad

ரொம்பின், மே 5 – பகாங்  மாநிலம் ரொம்பின் நாடாளுமன்ற தொகுதியில் இன்று நடைபெற்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளது.

Rompin by election

தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹசான் ஆரிஃபின் 23,796 வாக்குகளும்,பாஸ் வேட்பாளர் நஸ்ரி அகமட் 14,901 வாக்குகளும் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதன் படி, தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹசான் 8,895 வாக்குகள் வித்தியாசத்தில் குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி இத்தொகுதி உறுப்பினராக இருந்த டான்ஸ்ரீ ஜமாலுடின்
ஜார்ஜிஸ் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதையடுத்து இத்தொகுதி காலியானது.

கடந்த 2013 பொதுத் தேர்தலில் ஜமாலுடின் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பாஸ் மகளிர் அணித் தலைவி நூரிடா முகமட் சாலேவை, சுமார் 15,114 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.