Home நாடு சிங்கப்பூர் – மலேசியா விரைவு ரயில் திட்டத்தின் காலக்கெடு மறுஆய்வு!

சிங்கப்பூர் – மலேசியா விரைவு ரயில் திட்டத்தின் காலக்கெடு மறுஆய்வு!

752
0
SHARE
Ad

சிங்கப்பூர், மே 6 – மலேசியா, சிங்கப்பூர் இடையேயான விரைவு ரயில் திட்டத்தை முடிப்பதற்கான காலக்கெடு (இலக்கு தேதி) மறு ஆய்வு செய்யப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இத்திட்டம் எதிர்வரும் 2020-ம் ஆண்டில் முடிவுக்கு வரும் என
அறிவிக்கப்பட்டிருந்தது.

????????????????????????????

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாய்க்கிழமை, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் மலேசியப் நஜிப் துன் ரசாக் இடையே சந்திப்பு நிகழ்ந்தது.

இதையடுத்து விரைவு ரயில் திட்டத்தின் அளவு மற்றும் அதிலுள்ள நடைமுறை சிக்கல்களின் அடிப்படையில் திட்டத்திற்கான காலக்கெடுவை
மறு மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது என்று அவர் கூறினார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த வருடாந்திர சந்திப்பின்போது
இத்திட்டத்தின் மீதான ஈடுபாட்டை உறுதி செய்தனர்.

மேலும் இந்த ரயில் திட்டத்திற்கான முனையம் சிங்கப்பூரில் கிழக்கு ஜுரோங்கில் அமையும் என்று பிரதமர் லீ சியான் லூங் அறிவித்தார்.

மலேசியாவிற்கான முனையம் பண்டார் மலேசியாவில் அமையும் என கடந்த ஆண்டே
பிரதமர் நஜிப் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள 330 கிலோ மீட்டர் தூரத்தை 90 நிமிடங்களில்
கடக்கும் வகையில் இந்த விரைவு ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.