Home நாடு நாடாளுமன்றத்தில் ரொம்பின் தொகுதியின் புதிய எம்பி!

நாடாளுமன்றத்தில் ரொம்பின் தொகுதியின் புதிய எம்பி!

565
0
SHARE
Ad

CFQQ71_UUAAhT1eகோலாலம்பூர், மே 18 – ரொம்பின் தொகுதியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஹசான் ஆரிஃபின் இன்று நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த தகவலை தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன், புகைப்படத்துடன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில், ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினராக ஹசானும், பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்கட்சித் தலைவராக டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயிலும் பதவி ஏற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

62 வயதான ஹசான் ரொம்பின் தொகுதியின் அம்னோ துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். அரசியலில் மிகவும அனுபவம் வாய்ந்த அவர் அண்மையில் நடைபெற்ற ரொம்பின் தொகுதி இடைத்தேர்தலில் 23,796 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.