Home நாடு எதிர்கட்சித் தலைவராகப் பதவி ஏற்றார் வான் அசிசா!

எதிர்கட்சித் தலைவராகப் பதவி ஏற்றார் வான் அசிசா!

421
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 18 – சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் பெர்மாத்தாங் பாவ் தொகுதி எம்பி-ஆக இன்று நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில்.

11245533_585666898203257_2359482924662953674_n

(படம்: வான் அசிசா பேஸ்புக்)

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில், பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் பிகே ஆர் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தனது கணவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்காக பதவி விலகினார். அதன் பின்பு அத்தொகுதியில் அன்வார் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், ஓரினப்புணர்ச்சி வழக்கில் அன்வார் சிறைக்கு சென்றதால், கடந்த மே 7-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், வான் அசிசா மீண்டும் பிகேஆர் சார்பில் போட்டியிட்டு 30,316 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில், சபாநாயகர் பண்டிகர் அமின் மூலியா தலைமையில் இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் வான் அசிசா பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.

இந்த தகவலை ஜசெக தேசியத் தலைவர் லிம் கிட் சியாங் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொகுப்பு – ஃபீனிக்ஸ்தாசன்