வாஷிங்டன், ஏப்ரல் 21 – அமெரிக்காவின் இரண்டு போர்கப்பல்கள் ஏமன் நாட்டை நோக்கி விரைந்து சென்று கொண்டிருக்கிறது. ஏமனில் ஹவுதி என்ற தீவிரவாதிகள் அமைப்பு, அந்நாட்டு படையுடன் சண்டையிட்டு பல நகரங்களை கைப்பற்றி வைத்திருக்கிறது.
தொடர்ந்து சண்டையிட்டு, மற்ற நகரங்களையும் கைப்பற்ற முயன்று வருகிறது. ஷியா பிரிவு முஸ்லிம்களான இவர்களுக்கு,ஷியா பிரிவு நாடான ஈரான் தான் ஆயுதங்களை கொடுத்து உதவுகிறது. இதனை தடுக்கும் விதமாக அமெரிக்கா, அதன் அதி நவீன இரண்டு போர் கப்பல்களை ஏமனுக்கு அனுப்பியுள்ளது.
அவைகளை ஏமன் கடற்பகுதியில் நிறுத்தப்பட்டு, இரானில் இருந்து கப்பல்கள் மூலம் தீவிரவாதிகளுக்கு வரும் ஆயுதங்களை தடுத்து நிறுத்தும்.ஏற்கனவே ஏமனில் தீவிரவாதிகளை ஒழிக்கும் பணியில் சவுதி அரேபியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. சவுதிக்கு இந்த போர் கப்பல்கள் உதவியாக இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
இருந்தாலும் ஈரான் நாட்டு கொடியை தாங்கி வரும் கப்பல்களை சோதனயிட அமெரிக்காவுக்கு உரிமை இல்லை என்றும் சொல்லப்படுகிறது. நாங்கள் அந்த பகுதியில் இருந்துகொண்டு அரேபிய கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் நடப்பவைகளை தீவிரமாக கண்காணிப்போம் என்றார் அமெரிக்க கமாண்டன் கெவின் ஸ்டீபன்ஸ்.
ஏற்கனவே அந்த கடல் பகுதியில் சவுதி அரேபியா, எகிப்து மறறும் மற்ற நட்பு நாட்டு கப்பல்கள், ஈரானில் இருந்து கடல் வழியாக ஏதாவது வகையில் ஆயுதங்கள் ஏமனுக்கு வருகிறதா என்று கண்காணித்து வருகின்றன.
இப்போது அமெரிக்கா அனுப்பி இருக்கும் தியோடர் ரூஸ்வெல்ட் மற்றும் யு எஸ்.எஸ் நார்மன்டி ஆகிய ஆயுதம் தாங்கிய போர் கப்பல்களும் அவர்களுடன் சேர்ந்து அந்த பணியை மேற்கொள்ளும்.