Home கலை உலகம் சல்மான் கான் வழக்கில் மே 6-ஆம் தேதி தீர்ப்பு – மும்பை நீதிமன்றம் அறிவிப்பு!

சல்மான் கான் வழக்கில் மே 6-ஆம் தேதி தீர்ப்பு – மும்பை நீதிமன்றம் அறிவிப்பு!

585
0
SHARE
Ad

Salman-Khமும்பை, ஏப்ரல் 22 – கார் விபத்தில் ஒருவர் பலியானது தொடர்பாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மே 6ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.

சல்மான் கான் கடந்த 2002 செப்டம்பர் 28-ஆம் தேதி அதிகாலையில் குடிபோதையில் தனது காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றதாக  கூறப்படுகிறது. பாந்த்ராவில் அருகே கார் சென்றபோது, நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கார் ஏறியது.  இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை மும்பை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நேற்று  முன்தினம் சல்மான் கானின் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டார்.

#TamilSchoolmychoice

அப்போது சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியான போலீஸ் கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டீல்  இறந்துவிட்டார். அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படாததால் அவருடைய வாக்குமூலத்தை ஏற்கக்கூடாது என்று அவர் வாதிட்டார்.

இருதரப்பு  வாதங்களும் முடிவடைந்ததால் தீர்ப்பு தேதி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருந்ததது. அதன்படி சல்மான் கான்  வழக்கில் மே 6-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று செசன்ஸ் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.