Home நாடு ரோஸ்மா தலைமையில் பாலிவுட் ஒலி, ஒளி கண்காட்சி!

ரோஸ்மா தலைமையில் பாலிவுட் ஒலி, ஒளி கண்காட்சி!

567
0
SHARE
Ad

festival_2_286269562கோலாலம்பூர், ஏப்ரல் 22 – கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகம் ஏற்பாட்டில், முதன் முறையாக ‘இந்தியப் பெருவிழா’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கை பின்வருமாறு:-

“கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகம், முதன் முறையாக மார்ச் முதல் ஜூன் இறுதி வரை, ‘இந்தியப் பெருவிழா’ எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.”

#TamilSchoolmychoice

“இந்த பெருவிழாவினை முன்னிட்டு, இந்தியத் தூதரகம் பல பண்பாட்டு நிகழ்வுகளையும், இந்தியக் கலை கலாச்சார நிகழ்வுகளையும் மலேசியாவில் நடத்தவுள்ளது. இந்தியப் பெருவிழா 2015-இன் ஒரு முக்கியப் பகுதியாக வெள்ளி திரையின் ஒலி மற்று ஒளி கண்காட்சியும் இந்திய சினிமாவின் பயணமும் ஒன்றாகும்.”

“மலேசிய இந்திய தூதரகமும், இந்தியாவிலுள்ள தேசிய சபை அறிவியல் அருங்காட்சியகமும் இணைந்து, வெள்ளி திரை ஒலி மற்றும் ஒளி கண்காட்சியும் இந்திய சினிமாவின் பயணமும்  என்ற இந்நிகழ்வை கோலாலம்பூரிலும், மலாக்காவிலும் வழங்கவுள்ளார்கள்.”

“இந்த கண்காட்சியில், இந்திய சினிமாவின் வளர்ச்சி பற்றிய திரைப்பட துண்டுகள், விளம்பர பொருட்கள், கலைப்பொருட்கள்/பிரதி, ஊடாடும் பல்லூடகம் போன்றவை காட்சிக்கு வைக்கப்படும்.”

rosmah-mansor

“இந்த கண்காட்சி, டத்தின் படுக்கா ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அவர்களால் கலைக்கூடம் வேந்தர் கட்டிடம், மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூரில்  ஏப்ரல் 25, 2015 காலை 10.30 மணிக்கு திறப்பு விழா காண்கிறது.”

“மாண்புமிகு டத்தின் படுக்கா ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அவர்கள் கலை, கலாச்சாரத்தின்  மேல் கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டால் இந்த தொடக்க விழாவிற்கு வருகைப் புரிய சம்மதம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலாயாப் பல்கலைக்கழகம் “பாலிவுட் ஒலி மற்றும் ஒளி “ என்ற இந்த கண்காட்சி காலை 8 மணி மதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.”

“1896-ஆம் ஆண்டில் சினிமா இந்தியப் பார்வையாளர்களுக்காக மும்பை வாட்சன் ஹோட்டலில் அறிமுகப்படுத்தப்பட்டது. “ராஜா ஹரிச்சந்திரா” எனும் திரைப்படம் 1913-இல், ஸ்ரீ தாதாசஹீப் பால்கே அவர்களால் தயாரிக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படமாகும். இன்று உலகளவில், இந்தியா ஆண்டுதோறும் பல்வேறு மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரிக்கின்றது.”

“இன்று திரைப்படத்துறை ஆண்டுதோறும் ஏறக்குறைய 15 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்டுகிறது. இந்தியத் திரைப்படங்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்களின்  கலை தரமும் புதுமையும் உலகளவில் போற்றப்படுகின்றது.”

“இந்த கண்காட்சி இந்திய அரசின் கலாச்சார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் அருங்காட்சியகத்தால் பிரத்தியேகமாக மலேசியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 1992-ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது.”

“இக்கண்காட்சிக்கு நுழைவு இலவசமாகும். கடந்த நூற்றாண்டின் இந்திய சினிமாவின் வளர்ச்சியையும் அதன் முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தும் இக்கண்காட்சியைக் காண அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.”

– இவ்வாறு இந்தியத் தூதரகத்தின் பத்திரிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.