ஏப்ரல் 22 – நான்கு வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும்.
வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து சூடு கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடைந்து குணமாகும்.
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும். வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு 100.மி,கி மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும். வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும். பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் சாப்பிட வேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும். வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
(பின்குறிப்பு: இந்த வாழ்நலம் பகுதியில் வெளியிடப்படும் எழுத்துப் படிவங்கள், வாசகர்களுக்கு ஒரு தகவலுக்காக மட்டுமே தொகுத்து வழங்கப்படுகின்றன. இந்த தகவல்களை வாசகர்கள் மறு உறுதிப்படுத்திக் கொண்டு பின்பற்ற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்)
எந்த வகையிலும் இந்த தகவல்களை பூரண மருத்துவ சிகிச்சையாகவோ, மருத்துவ சிகிச்சைகளுக்கு ஈடாகவோ, அல்லது மாற்று மருத்துவ சிகிச்சையாகவோ வாசகர்கள் கருதவோ, இடமளிக்கவோ கூடாது. வாசகர்கள் மேற்கூறப்படும் தகவல்களைப் பின்பற்றுவதற்கு முன்னால் தங்களின் சொந்த மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இங்கே வழங்கப்படும் தகவல்களுக்கு செல்லியல் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)