Home கலை உலகம் இந்தியாவில் ரூ.146 கோடியைக் குவித்த முதல் ஹாலிவுட் படம் ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7!

இந்தியாவில் ரூ.146 கோடியைக் குவித்த முதல் ஹாலிவுட் படம் ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7!

532
0
SHARE
Ad

Fast and Furious 7 carsபுதுடெல்லி, ஏப்ரல் 22 – இந்தியாவில் ரூ.100 கோடியைக் குவித்த முதல் ஹாலிவுட் அல்லது வெளிநாட்டுத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது ‘ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் 7’ படம். ஜேம்ஸ் வான் இயக்கத்தில், பால் வாக்கர் நடித்துள்ள இந்தப் படம் இந்தியாவில் மூன்று வாரங்களுக்கு முன் வெளியானது.

படத்துக்கு உலகெங்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் 2,800 அரங்குகளில் வெளியானது. ஆங்கிலத்தில் மட்டுமில்லாமல், தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் படத்தை வெளியிட்டனர்.

2013-ஆம் ஆண்டு ஒரு கார் விபத்தில் பலியான நடிகர் பால் வாக்கரின் கடைசிப் படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் படத்தைப் பார்த்தனர். மொத்தம் ரூ.146 கோடியை இந்தியாவில் மட்டும் வசூலித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்தப் படம், வரிகள் போக நிகர வசூலாக ரூ 104 கோடியைக் குவித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில், ஹாலிவுட் படம் ஒன்று இவ்வளவு வசூல் குவித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.