Home இந்தியா ஜெயலலிதா வழக்கில் பவானி சிங்கை நீக்கக்கோரும் அன்பழகன் மனு 27-ஆம் தேதி தீர்ப்பு!

ஜெயலலிதா வழக்கில் பவானி சிங்கை நீக்கக்கோரும் அன்பழகன் மனு 27-ஆம் தேதி தீர்ப்பு!

527
0
SHARE
Ad

bhawanisingh-jayalalitha-30புதுடெல்லி, ஏப்ரல் 22 – ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங்கை நீக்கக் கோரும் அன்பழகன் மனு மீது ஏப்ரல் 27-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவித்துள்ளது.

மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

குற்றவாளிக்கு ஆதரவாக பவானி சிங் செயல்பட்டார் என அன்பழகன் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இம்மனு மீது விசாரணை முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு தேதி ஏப்ரல் 27 என அறிவிக்கப்பட்டுள்ளது.