Home நாடு ரொம்பின் இடைத்தேர்தல்: தேமு, பாஸ் நேரடிப் போட்டி!

ரொம்பின் இடைத்தேர்தல்: தேமு, பாஸ் நேரடிப் போட்டி!

554
0
SHARE
Ad

ரொம்பின், ஏப்ரல் 22 – ரொம்பின் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கும், பாஸ் கட்சிக்கும் இடையே நேரடி போட்டி நடைபெறவுள்ளது.

இன்று காலை நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில், தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ஹசான் அரிபின் மற்றும் பாஸ் கட்சி வேட்பாளர் நஸ்ரி அகமட் ஆகியோர் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

Rompin by election

#TamilSchoolmychoice

சுயேட்சை வேட்பாளர் முகமட் சுக்ரி முகமட் ரம்லி தாக்கல் செய்த வேட்புமனு இறுதி நேரத்தில் நிராகரிக்கப்பட்டது.

இது குறித்து முகமட் சுக்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், “மக்களிடம் எனக்கு ஆதரவு உள்ளது என்ற காரணத்தால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. உறுதியாகச் சொல்கிறேன் நான் 5000 வாக்குகள் பெற்றிருப்பேன். நான் போட்டியிட்டால் எங்கே அவர்களின் பெரும்பான்மை குறைந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 4-ம் தேதி செமினி அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ரொம்பின் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ ஜமாலுடின் ஜார்சிஸ் உயிரிழந்ததைத் அடுத்து அவரது தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் மே 5-ம் தேதி ரொம்பின் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.