Home இந்தியா சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் அணியை வெற்றி கொண்டது!

சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் அணியை வெற்றி கொண்டது!

682
0
SHARE
Ad

Chennai Super Kings Logo with Dhoniபெங்களூரு, ஏப்ரல் 23 – நேற்று பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இங்கு நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வீராட் கோலியின் தலைமையிலான பெங்களூர் அணியை 27 ஓட்டங்களில் வெற்றி கொண்டது.

முதலில் மழையினால் சிறிது நேரம் தாமதத்துடன் தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் 20 ஓவர்கள் முடிந்தபோது, சென்னை அணி 8 விக்கெட்டுகள் இழப்பில், 181 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் பெங்களூர் அணி 20 ஓவர்களை நிறைவு செய்தபோது 8 விக்கெட்டுகள் இழப்பில் 154 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து சென்னை அணி 27 ஓட்டங்களில் வெற்றி வாகை சூடி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியிருக்கின்றது.

கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல் அணியிடம் சென்னை அணி தோல்வி கண்டது.

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பந்து வீச்சாளர் அஷிஸ் நேரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

Bangalore Royal Challengers Logo