Home நாடு “பெர்மாத்தாங் பாவ் பாஸ் முடிவை மதிக்கிறேன்” – ஹாடி அவாங்

“பெர்மாத்தாங் பாவ் பாஸ் முடிவை மதிக்கிறேன்” – ஹாடி அவாங்

504
0
SHARE
Ad

ஷா ஆலம், ஏப்ரல் 23 – பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் பிகேஆருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யப் போவதில்லை என அத்தொகுதி பாஸ் பிரிவு எடுத்துள்ள முடிவை தாம் மதிப்பதாக பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

hadi awang 300-200

நேற்று, புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெர்மாத்தாங் பாவ் பாஸ் பிரிவு எடுத்துள்ள இம்முடிவு அக்கட்சியின் தனியுரிமை என்றும் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் இன்னும் பக்காத்தான் கூட்டணியில் தான் நீடிக்கிறோம். ஆனால் பெர்மாத்தாங் பாவ் பாஸ் பிரிவு எடுத்துள்ள முடிவை மதிக்கிறோம்.

“ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை மட்டும் வெறுமனே படித்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் (பெர்மாத்தாங் பாவ் பாஸ்) என்ன கூறுகிறார்கள் என்பதையும் கேட்க வேண்டும். தற்போதைய நிலையில் அவர்கள் எடுத்துள்ள முடிவை மதிக்கிறேன்,” என்றார் ஹாடி அவாங்.

முன்னதாக இடைத்தேர்தலில் ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனில் வேட்புமனு தாக்கலுக்கு முன்பு பிகேஆர் தலைவர்கள் மன்னிப்பு கோர வேண்டும் என பெர்மாத்தாங் பாவ் பாஸ் பிரிவு வலியுறுத்தி இருந்தது.

கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமல்படுத்த பாஸ் கட்சி மேற்கொண்ட முயற்சிக்கு ஆதரவு இல்லை என பிகேஆர் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.