Home இந்தியா ஜெயலலிதா கனவு நிறைவேறுகிறது; தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு!

ஜெயலலிதா கனவு நிறைவேறுகிறது; தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு!

553
0
SHARE
Ad

jayalalithaaசென்னை, ஏப்ரல் 23 – ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட இடம் தேர்வு செய்ய மத்திய அரசின் 5 பேர் கொண்ட குழு தமிழகம் வருகை தந்தனர். 5 மாவட்டங்களில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

அகில இந்திய மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், டெல்லியில் உள்ளதைப் போன்று தமிழகத்திலும் எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றை அமைத்திட வேண்டும் என்று கடந்த ஆண்டு முன்னால் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக அரசு 200 ஏக்கர் பரப்பளவில் 5 இடங்களை தேர்வு செய்து தேவையான தகவல்கள் மற்றும் விவரங்களுடன் மத்திய அரசுக்கு விரிவான கருத்துரு ஒன்றை அனுப்பியிருந்தது.

#TamilSchoolmychoice

தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் தமிழகத்தில் ஏய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்திட தேவையான இடத்தை தேர்வு செய்திட 5 நபர்கள் கொண்ட மத்தியக் குழுவை இன்று அனுப்பியுள்ளது.