Home உலகம் நேபாளத்தில் பேருந்து விபத்து: 17இந்திய பக்தர்கள் பலி!

நேபாளத்தில் பேருந்து விபத்து: 17இந்திய பக்தர்கள் பலி!

508
0
SHARE
Ad

CRASH.jpgB_நேபாள், ஏப்ரல் 23 – நேபாளத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் 17 இந்திய பக்தர்கள் பலியானார்கள், நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அந்த பயணிகள் சென்ற பேருந்து சாலையில் இருந்து நீரோடையில் கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காயம் அடைந்த 28 பேர் காத்மாண்டுவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்து குறித்த மெட்ரோ பாலிடன் போலீஸ் அதிகாரி நாராயன் சிங் கூறுகையில்;

“பேருந்து உருண்டதில் சம்பவ இடத்திலேயே 14 பயணிகள் மரணம் அடைந்தனர். மேலும் 3 பேர் காத்மாண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது இறந்தார்கள்” என்றார்.

#TamilSchoolmychoice

Nepal-bus-accident-fileவிபத்தில் யார் யார் இறந்தார்கள் என்ற அடையாளம் காணப்பட்டுள்ளது. டாடிங் மாவட்டத்தில் உள்ள நவுபிசே என்ற இடத்தில் பேருந்து சென்ற போது சாலையில் இருந்து உருண்டு அருகே உள்ளே நீரோடையில் கவிழ்ந்தது.

நேற்று காலை 6.45 மணிக்கு விபத்து ஏற்பட்டது. காத்மாண்டுவில் உள்ள பசுபதி கோவிலுக்கு சென்று விட்டு வந்த போது 20 இந்திய பக்தர்கள் சென்ற அந்த பேருந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்தவர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தைச்சேர்ந்தவர்கள் ஆவார்கள்.