Home நாடு “நான் தனியாக இருப்பதாக நினைக்கவில்லை” – மகாதீருக்கு நஜிப் மறைமுக பதில்

“நான் தனியாக இருப்பதாக நினைக்கவில்லை” – மகாதீருக்கு நஜிப் மறைமுக பதில்

581
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 23 –  தனது தலைமைத்துவம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வரும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு, தக்க பதிலளிக்க வேண்டும் என பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு அம்னோவைச் சேர்ந்தவர்களே நெருக்கடி கொடுத்து வந்தனர்.

????????????????????

இந்நிலையில், இன்று நடைபெற்ற ‘இண்வெஸ்ட் மலேசியா 2015’ நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தன்னைப் பற்றி விமர்சனம் செய்யும் மகாதீருக்கு மறைமுகமாக பதிலளித்துள்ளதாக முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#TamilSchoolmychoice

நஜிப் தனது உரையில், “நாட்டில் ‘சில தரப்பினர்’ தாங்கள் மட்டும் தனியாக உண்மையைப் பேசிக் கொண்டு இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் நான் சொல்வது என்னவென்றால், நான் இங்கே தனியாக நின்று பேசிக் கொண்டிருக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

“மலேசியாவால் வெற்றி பெற முடியும் என நம்பும் வெளிநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் முன்னிலையில் நான் இங்கே பேசிக் கொண்டிருக்கின்றேன். அவர்கள் நம்மை மிக உயர்வாகப் பார்க்கிறார்கள். அதனால் நான் தனியாக இருப்பதாக நினைக்கவில்லை” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் மிகச் சிறந்த அரசாங்கத்தில் இருப்பதாகவும், இந்த அரசாங்கம் மலேசியாவிற்கு வளர்ச்சியையும், நிலைப்புத்தன்மையையும் கொடுத்துள்ளது என தான் நம்புவதாகவும் நஜிப் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் எதிர்வரும் காலங்களில் இன்னும் பல வளர்ச்சிகளை ஏற்படுத்த இயலும் என்பதை தான் உறுதியளிப்பதாகவும் நஜிப் தெரிவித்துள்ளார்.

நஜிப்பின் தலைமைத்துவம் குறித்து அண்மைய காலமாக மகாதீர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றார்.

நஜிப் பதவி விலக வேண்டும் என்றும், இதை தான் மட்டுமே தனியாகக் கூறிக் கொண்டிருப்பதாகவும் மகாதீர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.