Home நாடு எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என கருதிவிடக் கூடாது – மொகிதின் யாசின்

எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என கருதிவிடக் கூடாது – மொகிதின் யாசின்

617
0
SHARE
Ad

muhyiddin-yassin1ரொம்பின், ஏப்ரல் 23 – ரொம்பின் இடைதேர்தலில் சுலபத்தில் வெற்றி பெற்றுவிடலாம் என தேசிய முன்னணியினர் கருதிவிடக் கூடாது என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

இத்தொகுதியில் தேசிய முன்னணிக்கு பலத்த ஆதரவு உள்ள போதிலும், தேசிய முன்னணியினர் கடுமையாக உழைத்து, வாக்காளர்களின் ஆதரவைப் பெற்று, வெற்றி பெரும்பான்மையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

நேற்று நடைபெற்ற ரொம்பின் இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் கலந்து கொண்ட மொகிதின் யாசின் கூட்டத்தில் பேசுகையில்,”நீண்டகாலமாக ரொம்பின் தொகுதி தேசிய முன்னணிக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளது. அதற்காக நாம் திருப்தியடைந்து, சும்மா இருந்து விட இயலாது. நமக்கான ஆதரவை மேலும் அதிகரிக்க வேண்டும்.”

#TamilSchoolmychoice

“இதற்கான பணிகளை அம்னோ உதவித் தலைவரும், ரொம்பின் தொகுதி தேசிய முன்னணி பணிக்குழு தலைவருமான டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஒருங்கிணைப்பார். அவருக்கு மாநில மற்றும் தேசிய அளவிலான பாரிசான் உறுப்புக் கட்சியினரும் உதவுவர். இதன் மூலம் நமது ஒற்றுமையை மக்களிடம் வெளிப்படுத்த முடியும்,” என்றார் மொகிதின்.

மேலும், விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அவை அனைத்துக்கும் விளக்கம் அளிக்கும் தளமாக இந்த இடைத்தேர்தலை தேசிய முன்னணி பயன்படுத்திக் கொள்ளும் என்றும் மொகிதின் கூறியுள்ளார்.