Home அவசியம் படிக்க வேண்டியவை அமெரிக்க மருத்துவத் துறையின் தலைவராக இந்தியர் தேர்வு!

அமெரிக்க மருத்துவத் துறையின் தலைவராக இந்தியர் தேர்வு!

515
0
SHARE
Ad

vivek muthyவிர்ஜினியா, ஏப்ரல் 24 – அமெரிக்க வாழ் இந்தியரான விவேக் மூர்த்தி (37) அமெரிக்க மருத்துவத் துறையின் உயர் பதவியான ‘சர்ஜென் ஜெனரல்’  (Surgeon-General) பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விர்ஜினியா மாகாணம், மையர் கோட்டை இராணுவ மைதானத்தில்  அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் தலைமையில், கடந்த 22-ம் தேதி நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் விவேக் மூர்த்தி, பகவத்கீதையின் பேரில் உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அவருக்கு ஜோ பிடன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இளம் வயதில் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் இந்திய-அமெரிக்கர் என்ற சிறப்பை விவேக் மூர்த்தி பெற்றுள்ளார்.

பதவி ஏற்ற பின் விவேக் மூர்த்தி கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“அதிபர் ஒபாமா என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பமான எனது பூர்வீகம் தற்போது மாறியதற்கு எனது பெற்றோரின் முயற்சி மிக முக்கியக் காரணம். நான் தற்போது இந்த நிலையை எட்டியதற்கு என் குடும்பத்தினர் என் மீது வைத்துள்ள நம்பிக்கைதான் அடிப்படையான ஒன்று” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் அமெரிக்க பொது சுகாதாரம் பற்றி கூறுகையில், “பொது சுகாதாரம் என்பது, கல்வி, வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்துடன் தொடர்பு கொண்டது. மருத்துவமனை மற்றும் சிகிச்சைக்கான அறைகளைத் தாண்டி, ஓர் உலகம் உள்ளது. அங்கு, போக்குவரத்து, வீட்டுவசதி, வளர்ச்சி ஆகிய பிரச்னைகளுக்காக, மக்கள் தினமும் போராடிக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்க மக்களின் ஆரோக்கிய பாதுகாப்பை மேம்படுத்த, கட்டாய முயற்சிகளை மேற்கொள்வேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.