Home கலை உலகம் மறைந்த ஹானி சிவ்ராஜ் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நாளை நடைபெறும்

மறைந்த ஹானி சிவ்ராஜ் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நாளை நடைபெறும்

634
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 26 – உள்நாட்டுக் கலைஞர்களில் அண்மையக் காலங்களில் தமிழகம் சென்று தமிழ்ப் படங்களில் நடித்து முக்கியத்துவம் பெற்றவர் ஹானி சிவராஜ் (முழுப் பெயர் ஹானிடா சிவகலைவாணி). தனது திறமை விடாமுயற்சி காரணமாக, உள்நாட்டுக் கலையுலகில் தனியிடம் பெற்று வளர்ந்து வந்த நிலையில் அவரது திடீர் அகால மரணம் உள்நாட்டுக் கலையுலகிற்கு நேரிட்ட பேரிழப்பாகும்.

Hani Sivaraj

பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநரும் ஹானி சிவராஜூக்கு தனது படங்களில் வாய்ப்பளித்திருந்தவருமான வெங்கட் பிரபு, ஹானி சிவராஜின் மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு வழங்கிய நெகிழ்ச்சி தரும் அஞ்சலி அறிக்கை ஹானியின் திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

#TamilSchoolmychoice

மறைந்த ஹானி சிவராஜின் 16வது நாள் ஆத்மசாந்தி பிரார்த்தனை நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அவரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நாளை திங்கட்கிழமை ஏப்ரல் 27ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு கீழ்க்காணும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

 100, Jalan 22/44,

Section 22, Kampong Tunku,

46300 Petaling Jaya.

மறுநாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு ஆத்ம கிரியை சாந்தி பூஜை டெம்ப்ளர் பார்க் ஆற்றங்கரையில் நடைபெறும்.

அன்று (28 ஏப்ரல் 2015) பிற்பகல் 1.00 மணிக்கு மேற்கண்ட இல்ல முகவரியில் மதிய உணவு வழங்கப்படும்.

ஹானி சிவராஜின் நண்பர்களும், சக கலைஞர்களும் இந்த ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் கலந்து கொண்டு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு ஹானியின் பெற்றோர்கள் ஜோதிடர் ராஜேஸ்வரன் (முன்னாள் எம்சிஐஎஸ் ஊழியர்), தாயார் சரஸ்வதி சுப்ரமணியம் (முன்னாள் பந்தாய் மெடிக்கல் சென்டர் ஊழியர்) மற்றும் அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த வேளையில், அனுதாபங்கள் தெரிவித்தும், மலர் வளையங்கள் அனுப்பியும் தங்களின் துயரத்தில் பங்கு கொண்ட உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஹானி சிவராஜின் குடும்பத்தினர் தங்களின் நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

மேல்விவரங்களுக்கும் தொடர்புக்கும்: செல்பேசி எண்: 017-3999561