Home உலகம் நேபாள நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 2,336; இந்தியாவில் 56; திபெத்தில் 17!

நேபாள நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 2,336; இந்தியாவில் 56; திபெத்தில் 17!

578
0
SHARE
Ad

Nepal Earthquake 2காட்மாண்டு, ஏப்ரல் 26 – நேற்றைய நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,336 ஆக உயர்ந்துள்ளது.

நேபாள நாட்டில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தால் அண்டை நாடான இந்தியாவிலும் பாதிப்புகள் ஏற்பட்டு இதுவரை 56 பேர் மரணமடைந்துள்ளனர்.

மற்றொரு அண்டை நாடான திபெத்திலும் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

4,647 பேர் இந்த நிலநடுக்கத்தால் கடுமையான காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு நாள் கழித்து, இன்று வட இந்தியாவிலும், நேபாளத்திலும் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்க அதிர்வுகள் மீண்டும் ஏற்பட்டன.