Home தொழில் நுட்பம் சியாவுமியில் ரத்தன் டாடா முதலீடு!

சியாவுமியில் ரத்தன் டாடா முதலீடு!

857
0
SHARE
Ad

ratan-tata-xiaomiபுது டெல்லி, ஏப்ரல் 27 – சியாவுமியை இந்திய நிறுவனமாக மாற்ற விரும்புகிறேன் என்ற அறிவிப்பு அதன் நிறுவனர் லீ ஜூங்கிடமிருந்து வெளிவந்து ஓரிரு நாட்களே உள்ள நிலையில், மற்றொரு ஆச்சரியமளிக்கும் அறிவிப்பு அந்நிறுவனத்திடமிருந்து வெளிவந்துள்ளது. அதுதான் இந்தியாவின் மிக முக்கிய தொழில் அதிபரான ரத்தன் டாடா, சியாவுமியில் முதலீடு செய்ய உள்ளார் என்பது.

இது பற்றி லீ ஜூன் கூறுகையில், “உலக அளவில் பெரு மதிப்பிற்குரிய ரத்தன் டாடா, இந்தியாவில் எங்கள் நிறுவனம் எடுத்திருக்கும் முயற்சிகளுக்கு உதவும் வகையில் முதலீடு செய்யவிருப்பது, எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவில் நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு இது சிறந்த தொடக்கமாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

சியாவுமியில் முதலீடு செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற சிறப்பை டாடா நிறுவனம் பெறுகிறது. இந்நிலையில், டாடா முதலீடு பற்றி முதல் அறிவிப்பை வெளியிட்ட அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் ஹுகோ பர்ரா கூறுகையில், “எங்கள் நிறுவனத்தில், டாடா குழுமம் முதலீடு செய்யவிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுடன் இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

சியாவுமியில் டாடா முதலீடு செய்வது உறுதியாகி உள்ள நிலையில், அவர் எவ்வளவு முதலீடு செய்கிறார், இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் என்ன என்பது போன்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.