Home நாடு இடைத் தேர்தலில் வாக்களிக்க அன்வாரை சிறையில் இருந்து வெளியே அனுப்ப இயலாது: ஹாமிடி

இடைத் தேர்தலில் வாக்களிக்க அன்வாரை சிறையில் இருந்து வெளியே அனுப்ப இயலாது: ஹாமிடி

581
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 27 – பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை சிறையில் இருந்து வெளியே அனுப்ப இயலாது என உள்துறை அமைச்சர் சாஹிட் ஹாமிடி (படம்)தெரிவித்துள்ளார்.

Ahmad Zahid Hamidiஎனினும் சிறையில் இருந்தபடியே அன்வார் வாக்களிக்க ஏற்பாடு செய்வது தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்தது என்றார் அவர்.
“எனக்கு தெரிந்தவரையில் சிறையில் உள்ள ஒருவரால் தேர்தலில் வாக்களிக்க இயலாது. எனினும் சட்டம் அனுமதிக்குமாயின் தேர்தல் ஆணையம் இதுகுறித்து முடிவு செய்யலாம். சுங்கைபூலோ சிறையில் இருந்தபடியே அன்வார் வாக்களிப்பது குறித்து முடிவெடுப்பதை தேர்தல் ஆணையத்தின் வசமே விட்டுவிடுகிறேன்,” என்றார் ஹாமிடி.

முன்னதாக, சிறையில் உள்ள அன்வாரை இடைத்தேர்தலில் வாக்களிக்க வெளியே அனுப்ப வேண்டும் என்று அவரது மகள் நூருல் இசா உள்துறை அமைச்சுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் சிறைவாசிகள் வாக்களிப்பதற்கான வழிமுறையை உள்துறை அமைச்சு வகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

#TamilSchoolmychoice

இதற்கு பதிலளித்துள்ள சாஹிட் ஹாமிடி, “சிறைத் தண்டனை பெற்றவர்கள் வாக்களிக்க சட்டம் அனுமதிக்குமாயின், சுங்கைபூலோ சிறைக்கு தேர்தல் ஆணையம் வாக்குச்சீட்டுகளை அனுப்பி வைக்கலாம். எனினும் சட்ட விதிமுறைகள் இதை அனுமதிக்குமா என்பதை கண்டறியும் பொறுப்பை தேர்தல் ஆணையத்திடமே விட்டுவிடுகிறேன்,” என்றார்.