Home நாடு கேள்விக்குறியில் லீ சோங் வெய்யின் எதிர்காலம் – மதியம் 3 மணியளவில் முடிவு!

கேள்விக்குறியில் லீ சோங் வெய்யின் எதிர்காலம் – மதியம் 3 மணியளவில் முடிவு!

474
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 27 – மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வெய் மீதான ஊக்கமருந்து வழக்கின் முடிவு இன்று மதியம் 3 மணியளவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

khairy

இது குறித்து இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று மதியம் 3 மணியளவில் லீ சோங் வெய்யுடன் பத்திரிக்கையாளர்களை சந்திக்கின்றேன். அந்த சந்திப்பில் லீ சோங் வெய்யின் எதிர்காலத்தை அறிவிக்கப்போகின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கோப்பன்ஹேகன் நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சோங் வெய் பின்னர் ஊக்க மருந்து பரிசோதனையின் போது சிக்கினார்.

தடை செய்யப்பட்ட ‘டெக்சாமிதாசோன்’ என்ற மருந்தை பயன்படுத்திய காரணத்தால், 32 வயதான அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார் சோங் வெய்.

முடிவு தனக்கு பாதகமாக அமையும் பட்சத்தில் தான் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக லீ சோங் வெய் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.