Home உலகம் நேபாள நிலநடுக்கம்: 30 மீட்புப்படை வீரர்கள், 20 மருத்துவர்களை அனுப்புகிறது மலேசியா!

நேபாள நிலநடுக்கம்: 30 மீட்புப்படை வீரர்கள், 20 மருத்துவர்களை அனுப்புகிறது மலேசியா!

483
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஏப்ரல் 27 – நேபாள நாட்டில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும், மலேசியாவில் இருந்து 30 மீட்புக் குழுவினரும், 20 மருத்துவக் குழுவினரும் அனுப்பப்படவுள்ளதாக மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

Nepal Earthquake 2

இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

#TamilSchoolmychoice

நேபாள நாட்டிலும், இந்தியாவின் வட மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும், தற்போது அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதையும் மலேசிய அரசாங்கம் அறிகின்றது.

எனவே, மலேசிய பேரிடர் மீட்பு சிறப்புக் குழுவைச் சேர்ந்த 30 வீரர்கள், தேவையான பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் அந்நாட்டிற்கு செல்கின்றனர்.

மேலும், மெர்சி மலேசியா மற்றும் மலேசிய ரெட் கிரசெண்ட் சொசைட்டி ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 20 மருத்துவர்களும் மீட்புக் குழுவினரும், தேவையான மருத்துவ வசதிகளுடன் மலேசிய வான் படையைச் சேர்ந்த சி130 விமானத்தில் அனுப்பப்படவுள்ளனர்.

சி130 விமானம் அங்கு தயாராக வைக்கப்பட்டு பேரிடர் பகுதிகளில் மீட்கப்பட்டிருக்கும் மலேசியர்களை பாதுகாப்பாக கோலாலம்பூர் அழைத்து வரும்.

பேரிடரில் தங்களது அன்பு உறவுகளை இழந்தவர்களுக்கு மலேசியா சார்பாக, எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நேபாள நாடு இந்த துயரத்திலிருந்து மீண்டு வர மலேசியா தொடர்ந்து தனது உதவிகளை மேற்கொண்டு வரும்.

இவ்வாறு நஜிப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.