Home இந்தியா மகளுக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டியது குறித்து ஜான்டி ரோட்ஸ் விளக்கம்!

மகளுக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டியது குறித்து ஜான்டி ரோட்ஸ் விளக்கம்!

545
0
SHARE
Ad

jontyபுதுடெல்லி, ஏப்ரல் 27 – இந்திய கலாச்சாரம் என்னை கவர்ந்ததால் தனது பெண் குழந்தைக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டியதாக தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.

தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் ஐ.பி.எல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பீல்டிங் பயிற்சியாளராக உள்ளார்.

இவரது மனைவி மெலின் ஜெனி நேற்று முன்தினம் மும்பை சாந்தாக்ருசில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

#TamilSchoolmychoice

குழந்தைக்கு ‘இந்தியா ஜெனி ரோட்ஸ்’ என்று ஜான்டி பெயர் சூட்டினார். குழந்தைக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டியது, இந்தியர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், ஜான்டி ரோட்ஸ் இது குறித்து கூறுகையில்,

jonty(1)”வாழ்க்கையில் தென்ஆப்ரிக்காவுக்கு பிறகு பெரும்பாலான நாட்களை இந்தியாவில்தான் கழித்துள்ளேன். இந்தியா எனக்கு இரண்டாவது தாய்நாடு”.

“இந்திய மக்களின் கலாச்சாரம் என்னை மிகவும் கவர்ந்தது. மதநம்பிக்கை கொண்ட அதே நேரத்தில் முற்போக்கு சிந்தனை நிறைந்த மக்கள் இங்கு நிறைந்துள்ளனர்”.

“இதனால்தான் எனது மகளுக்கு ‘இந்தியா’ என்று பெயர் சூட்டினேன். எனது மகளும் வருங்காலத்தில் ‘இந்தியா’ போல மதநம்பிக்கையுடன் சமூக சீர்திருத்த சிந்தனைகளுடன் திகழுவாள்” என்றார்.