லண்டன், ஏப்ரல் 27 – இங்கிலாந்து நாட்டின் 300 மிகப்பெரும் செல்வந்தர்கள் பட்டியலை பிரபல ‘சண்டே டைம்ஸ்’ நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதில், இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த எலிசெபத் ராணியின் பெயர் இல்லாதது அனைவரையும் ஆச்சர்யமடையச் செய்துள்ளது.
இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘சண்டே டைம்ஸ்’ நாளிதழ் ஆண்டு தோறும் 300 செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு முதல் இடத்தை இந்திய வம்சாவளியை சேந்த இந்துஜா சகோதரர்கள் பெற்றிருந்தனர்.
ஆனால், இம்முறை உக்ரைன் வம்சாளி தொழிலதிபர் லென் பிலவட்னிக் முதலிடம் பெற்றுள்ளார். அவருடைய சொத்து மதிப்பு 13.17 பில்லியன் பவுண்ட்கள் ஆகும். இரண்டாவது இடத்தை இந்துஜா சகோதரர்கள் ஸ்ரீ , மற்றும் கோபி இரண்டாம் இடம் வகிக்கின்றனர்.
மூன்றாம் இடத்தில் ஆஞ்சலோ கனடியன் மேற்கத்திய குடும்பம் பெற்றுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு 10 மில்லியன் அதிகரித்து 340 பில்லியனாக இருந்த போதிலும் 300 பேர் பட்டியலில் எலிசபெத் இராணிக்கு இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.