சுங்கை புவாயா தமிழ்ப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசிரியர்களுக்கான சிறுகதை பட்டறையில் சிறுவர் சிறுகதைக்கான தன்மைகள், எழுதும் முறை, உத்திகள் எனப் பல விளக்கங்கள் கே.பாலமுருகன் அவர்களால் கவரும் வகையில் படைக்கப்பட்டன. பட்டறையில் கலந்துகொண்ட பல ஆசிரியர்கள் சிறுகதையின் மீது ஆர்வம் வந்திருப்பதாகத் தெரிவித்தார்கள்.
மதியம் 1.30க்குத் தொடங்கிய சிறுகதை எழுதும் பட்டறையில் சுங்கை புவாயா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி அவர்கள் தனது தலைமையுரையில் இதுநாள் வரையில் கோலா லங்காட் வட்டாரத் தமிழ்ப்பள்ளிகள் இணைந்து இதுபோன்று இலக்கியப் பட்டறைகள் நடத்தியதில்லை என்றும் இதுவே முதல் முயற்சி என்றும் தெரிவித்தார்.
எதிர்காலக் கல்வியில் இலக்கியம் மொழி வளர்ச்சிக்கும் சிந்தனை வளர்ச்சிக்கும் இன்றியமையாத பங்கினை வகிக்கும், ஆகையால் ஆசிரியர் சமூகம் இலக்கியத்தில் தனி ஈடுபாடு காட்டி எழுத்துத் துறையில் பங்கேற்பதும் அவசியம் எனக் கருதுவதாக நாடு முழுவதும் சென்று மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறுகதை பட்டறையை வழிநடத்தி வரும் ஆசிரியரும் எழுத்தாளருமான கே.பாலமுருகன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
உங்கள் வட்டாரங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு வழிகாட்டிக் கட்டுரை பட்டறைகள் அல்லது சிறுவர் சிறுகதை எழுதும் பட்டறைகளுக்கு தமிழ்மொழி திறமிகு ஆசிரியர் கே.பாலமுருகனைத் தொடர்புக் கொள்ளலாம்; 0164806241.