Home உலகம் பாலியல் தேவைகளுக்கும் இனி ரோபோ தான்  – சர்ச்சைகளைக் கிளப்பும் அறிவியல்!

பாலியல் தேவைகளுக்கும் இனி ரோபோ தான்  – சர்ச்சைகளைக் கிளப்பும் அறிவியல்!

698
0
SHARE
Ad

robo3கோலாலம்பூர், ஏப்ரல் 28 – ஹாலிவுட்டில் கடந்த 2013-ம் ஆண்டு ‘ஹெர்’ (Her) என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. படத்தின் கதைக்கு பல்வேறு விருதுகளும், பாராட்டுக்களும் பெரிய அளவில் கிடைத்தன. அந்த படத்தில் கதாநாயகன், தான் கடையில் வாங்கிய ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial Intelligence) கொண்ட மென்பொருளை விரும்புவார். பெண் குரலைக் கொண்ட அந்த மென்பொருளிடம் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார். அந்த மென்பொருளும், தனது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, கதாநாயகனிடம் காதல் மொழி பேசும்.

படம் வந்த புதிதில் இதெல்லாம் சாத்தியமா, என்பது போன்ற சர்ச்சைகளும் எழாமலில்லை. இந்நிலையில், புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட்  ஜர்னல் பத்திரிக்கைக்கு லியுரா பெர்மன் என்ற மருத்துவர் எழுதியுள்ள கட்டுரையும் ஹெர் படம் போல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பிட்ட அந்த கட்டுரையில் லியுரா கூறியுள்ளதாவது:-

“2050-ம் ஆண்டு நாம் அனைவரும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான விண்கலத்தில் பறந்து கொண்டிருப்போம். நமக்கு அருகில் நண்பர்களாக ரோபோக்கள் அமர்ந்திருக்கும். நமது பாலியல் தேவைகளை அவை நிறைவேற்றும். அதற்கான கண்டுபிடிப்புகள் இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் முடிவடைந்து விடும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், “மனிதர்களின் பாலியல் தேவைகளை ரோபோக்கள் நிறைவேற்றுவதால், மனிதர்களுக்குள் பரவும் நோய்களும் கட்டுப்படும். ஆனால், மனிதர்களுக்கு இடையேயான பரஸ்பர அன்பு தொலைந்துவிடும். நாமும் ரோபோக்களைப் பிரதிபலிப்போம். இந்த மாற்றத்தை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஹெர் படப் போல் ஏற்கனவே ‘இன்விசிபில் பாய் ஃபிரண்ட்’ (Invisible Boyfriend) என்ற செயற்கை நுண்ணறிவு கொண்ட மென்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில் உள்ளது. அந்த மென்பொருள், பெண்கள் எப்படி தனக்கு குறுந்தகவல் அனுப்புகின்றனரோ, அதேபோன்ற குறுந்தகவலை அவர்களுக்கு அனுப்பும்.  இந்நிலையில், மருத்துவர் லியுரா பெர்மன் கூறிய கருத்துக்களும் சாத்தியமான ஒன்றே என விஞ்ஞானிகள் பலர் தெரிவித்துள்ளனர்.

வரும் காலத்தில் பெண்களும், ஆண்களும் தங்கள் கற்பனைக்கு ஏற்றார் போல் ரோபோக்களை முன்பதிவு செய்து வாங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.