Home இந்தியா ஐபிஎல்: 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வெற்றி கொண்டது ஹைதராபாத்!

ஐபிஎல்: 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வெற்றி கொண்டது ஹைதராபாத்!

597
0
SHARE
Ad

Hyderabad Sunrisers logoமொஹாலி (பஞ்சாப்), ஏப்ரல் 28 – நேற்று இங்கு நடைபெற்ற பெப்சி-ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27வது போட்டியில் கிங்ஸ் ஆஃப் பஞ்சாப் அணியும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இதில் ஹைதராபாத் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யார் முதலில் பந்து வீசுவது என்ற காசு சுண்டிப் பார்க்கும் தேர்வில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதல் முதலில் பந்துவீச தீர்மானித்தது

முதல் பாதி ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிந்தபோது, 6 விக்கெட்டுகளை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.

#TamilSchoolmychoice

இரண்டாவது பாதி ஆட்டத்தில் விளையாடத் தொடங்கிய பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடித்தபோது 9 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனைத் தொடர்ந்து 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

Kings of Punjab Logo

இன்று சென்னையில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதும் முக்கியமான விறுவிறுப்பான ஆட்டம் நடைபெறுகின்றது.

 

 

 

 

சுருக்கமான ஸ்கோர்

ஹைதராபாத் -150/6

வார்னர்-58

ஹென்ரிக்ஸ்-30

பஞ்சாப்-130/9

ரித்திமான் சாஹா- 42

ஜார்ஜ் பெய்லி-22