Home அவசியம் படிக்க வேண்டியவை நேபாள நிலநடுக்கம்:தர்பார் சதுக்கம் இடிந்து விழும் காணொளி!

நேபாள நிலநடுக்கம்:தர்பார் சதுக்கம் இடிந்து விழும் காணொளி!

539
0
SHARE
Ad

darbur2காட்மாண்டு, ஏப்ரல் 28 – நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், 6000 பேர் பலத்த காயங்களுடன் மருத்து முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்மாண்டுவில் இருந்த பழமையான கட்டிடங்கள் பலவும் இடிந்து தரைமட்டமாயின. குறிப்பாக தர்பார் சதுக்கம், தர்காரா கோபுரம் போன்றவையும் இடிந்து போயின.

இந்நிலையில், தர்பார் சதுக்கம் இடியும் காணொளி சமூக ஊடகங்களில் அதிவேகமாக பரவி வருகின்றது. அந்த காணொளியில், தர்பார் சதுக்கம் அருகே தங்கி இருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் , இயற்கை அழகை தனது கேமராவில் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அப்பொழுது திடீர் என கட்டிடங்கள் ஆட்டம் காண ஆரம்பித்ததால், மக்கள் அலறிக் கொண்டு ஓடுகின்றனர்.

தர்பார் சதுக்கம் அருகே பறவைகள் கூட்டம் கூட்டமாக திடீர் என பறக்கின்றன. கண் இமைக்கும் தருணத்தில், தர்பார் சதுக்கம் இடிந்து தரைமட்டமாகின்றது. அந்த இடம் முழுவதும் புழுதி கிளம்புகிறது.

#TamilSchoolmychoice

காண்போரை அதிர்ச்சியாக்கும் அந்த காணொளியைக் கீழ் காண்க:

https://www.youtube.com/watch?v=Hh2n-OYPBno