Home கலை உலகம் திரிஷா-வருண் மணியன் திருமணம் நின்றதா? அதிர்ச்சியில் திரையுலகத்தினர்!

திரிஷா-வருண் மணியன் திருமணம் நின்றதா? அதிர்ச்சியில் திரையுலகத்தினர்!

624
0
SHARE
Ad

trisha varun,சென்னை, ஏப்ரல் 28 – தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து 10 வருடங்களுக்கு மேல் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் பிரபல தயாரிப்பாளர் வருண் மணியனை திருமணம் செய்வதாக இருந்தார்.

ஜனவரி மாதம் தான் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவலின் படி இவர்கள் உறவில் முன்பு போல் சுமுகமாக இல்லாமல் விரிசல் விழுந்துள்ளதாம்.

இது குறித்து விசாரிக்கையில் இந்த தகவல் உண்மை என்பது போல் தான் தெரிகிறது. இதனால் தான் திரிஷா, வருண் மணியன் தயாரிக்கும் படத்திலிருந்து விலகினார் என கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

trisha-krishnan-varun-manian-engagement_142208078770மேலும், தற்போதெல்லாம் எந்த விழாக்களுக்கும் இருவரும் சேர்ந்து வருவது இல்லையாம். இதை தமிழகத்தில் பிரபல நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த செய்தி திரைப்பிரபலங்களுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகவில்லை.