Home உலகம் பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

பாலி நைன் வழக்கு: 8 பேர் கொல்லப்பட்டனர் – பெண் கைதி தப்பித்தார்!

1102
0
SHARE
Ad

mayuran2ஜகார்த்தா, ஏப்ரல் 29 – டோனி அபாட்டின் தொடர் கோரிக்கைகள், மயூரன் சுகுமாரனின் உருக வைக்கும் ஓவியங்கள், தண்டனை விதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் நடத்திய பிரார்தனைகள் என எதுவும் இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மனதை அசைத்துப் பார்க்கவில்லை.

இந்தோனேசிய நேரப்படி சரியாக நள்ளிரவு 12.25 மணிக்கு மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பாலி நைன் கைதிகளுக்கும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பெண் கைதியான மேரி ஜேன் வேலோசோவிற்கு மட்டும் கருணை காட்டப்பட்டதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில மாதங்களாக விடோடோ, பாலி நைன் குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றாலும், கடந்த ஜனவரி மாதம் அவர் பாலி நைன் குறித்து கூறுகையில், “போதைப் பொருட்களால் இந்தோனேசியாவில் நாள் ஒன்று 50 பேர் இறக்கின்றனர். ஆகவே, போதைப் பொருள் கும்பலுக்காக என்னிடம் கருணை எதிர்பார்க்காதீர்கள்” என்று கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

அவர் கூறியது போலவே கடைசி வரை அவரிடம் கருணை பிறக்கவில்லை. ஏறக்குறைய 10 ஆண்டு காலமாக நீடித்து வந்த அவர்களின் உயிர் போராட்டம் சில நிமிடங்களுக்கு முன்னாள் முடிந்து போயின.

மரண தண்டனைக்குரிய குற்றங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. ஆனால் மரண தண்டனையின் மூலம் பறிக்கப்படும் உயிர் நாட்டுக்கு நாடு வேறுபடுவதில்லை. உயிருக்கான அளவு கோல்கள், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறாக இருக்க முடியாது.

மனிதர்களால் மீட்டுக் கொடுக்க முடியாத உயிரை, சட்ட விரோதமாக பறித்தாலும் சரி, சட்ட ரீதியாக பறித்தாலும் சரி, அது கொலைக்குச் சமமானதே என பெரும்பான்மையான நாடுகள் ஒப்புக் கொள்கின்றன. அவற்றில் விதிவிலக்காக இருக்கும் நாடுகளில் இந்தோனேசியாவும் ஒன்று.