கோலாலம்பூர், ஏப்ரல் 29 – துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் கேள்விகளுக்கு பிரதமர் டத்தொஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதிலளிக்க வேண்டும். மௌனமாக இருக்கக்கூடதென முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவித்தார்.
மகாதீரின் கேள்விகளுக்கு தொடர்ந்து மௌனம் காத்து வருவது ஏற்புடைய செயல் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். மகாதீர் கேள்விகளுக்கு நஜிப் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
அதேவேளையில், நஜிப் பிரதமர் என்ற முறையில் மௌனம் காக்க முடியாது என மலேசிய இஸ்லாமிய கருத்துணர்வு கழகத்தின் ஏற்பாட்டில் நிகழ்ந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் படாவி இதனைத் தெரிவித்தார்.
மகாதீரின் கேள்விகளுக்கு நஜிப் பதில் சொல்ல வேண்டும் என்று அம்னோவின் மூத்த தலைவர்கள் கடந்த சில நாள்களாக கோரிக்கை விடுத்து வரும் வேளையில், அந்தப் பட்டியலில் அப்துல்லா அகமட் படாவியும் சேர்ந்துள்ளார்.
ஒரு தலைவர் மக்களிடம் தனது கருத்துக்களை முன்வைப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த அடிப்படையில் மகாதீர் தனது கருத்துக்களை கேள்விகளாக தொடுத்துள்ளார்.
அவருடைய கேள்விகளுக்கு நஜிப் பதிலளிக்காமல் மௌனம் காத்து வருவாரேயானால் அது அம்னோவிற்கும், மக்களுக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என் அப்துல்லா அகமட் படாவி தெரிவித்தார்.