சிலகாப், ஏப்ரல் 29 – ‘பாலி 9’ போதைப் பொருள் கடத்தல் வழக்கில், இரு ஆஸ்திரேலியர்கள் உட்பட 8 பேருக்கு இன்று அதிகாலை இந்தோனேசியா அரசாங்கம் மரண தண்டனையை நிறைவேற்றியது.
நேற்று அந்த 8 பேரின் குடும்பத்தினரும் நூசா கம்பாங்கன் தீவுக்கு வரவழைக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களுடன் சில மணி நேரங்கள் செலவிட அனுமதிக்கப்பட்டனர்.
தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் நூசா கம்பாங்கன் தீவு மற்றும் ஆஸ்திரேலியாவில் இறுதி நேர பரபரப்பான நிமிடங்களின் படங்களை கீழே காணலாம்:
(நூசா கம்பாங்கன் தீவைச் சுற்றி நேற்று கடும் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதற்கென சிறப்புப் படையினர் நேற்று தீவுக்கு வந்திருந்தனர்)
(கொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய பிரஜை மயூரன் தன்னைத் தானே தம்படமாக வரைந்து கொண்ட ஓவியம் இது. அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கையில் ஏந்தியபடி மயூரனுக்கு கருணை காட்டும் படி கடைசி வரை போராடினர்)
(10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்து தற்போது திருந்தி வாழும் மயூரன் மற்றும் ஆண்ட்ரியூ சான் என்ற இரு ஆஸ்திரேலியர்களையும் கொல்ல வேண்டாம் என ஆஸ்திரேலிய அரசாங்கம் மன்றாடிய போதும் இந்தோனேசியா கருணை காட்ட மறுத்துவிட்டது. நேற்று முன்தினம் அவர்களின் உறவினர்கள் சிட்னி நகரில் பூக்களைக் கொண்டு இந்த மிதவையை தயாரித்து பிரார்த்தனை செய்தனர்.)
(சிட்னி நகரில் மேலும் பல இடங்களில் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.)
(தண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பிலிப்பன்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி ஜேனுக்காக இந்தோனேசியாவில் அவரது உறவினர்கள் பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். பிரார்த்தனை பலித்து அதிர்ஷ்டவசமாக மேரி ஜேன் மட்டும் மரணத்திலிருந்து தப்பினார்.)
(மேரி ஜேனுக்காக பிரார்த்தனை செய்யும் அவரது உறவினர்கள் மற்றும் போராட்டவாதிகள் )
(மயூரனின் தாயார், சகோதரி தம்பி ஆகியோர் நேற்று கடைசியாக மயூரனை பார்வையிட்டுவிட்டு திரும்பிய போது)
(பிலிப்பினோ பெண் மேரி ஜேனின் மகன்கள் மார்க் டேரென் மற்றும் மார்க் டேனியல் தங்களது தாயைப் பார்வையிட செல்கின்றனர்)
(தீவு முழுவதும் கடுமையான பாதுகாப்புப் பணியில் இந்தோனேசிய காவல்துறையினர்)
படங்கள்: EPA