Home தொழில் நுட்பம் விண்டோஸ் 10 ஒரு புதிய சகாப்தம்-சத்யா நாதெல்லா!

விண்டோஸ் 10 ஒரு புதிய சகாப்தம்-சத்யா நாதெல்லா!

624
0
SHARE
Ad

nadhellaகோலாலம்பூர், ஏப்ரல் 30 – விண்டோஸ் 10, புதிய தலைமுறைக்காக உருவாக்கப்பட்ட நவீன இயங்குதளம். இதுவரை வெளியான விண்டோஸ் இயங்குதளங்களில், விண்டோஸ் 10 புதிய சகாப்தம் ஒன்றை படைக்கக் காத்திருக்கிறது. இணையத்தை நோக்கி முழுவதுமாக செல்லும் உலகில் விண்டோஸ் 10-ன் பயன்பாடு அத்தியாவசியமாகும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.

பல்வேறு குறைபாடுகள் காரணமாக ‘இன்டெர்நெட் எக்ஸ்புளோரர்’ (Internet Explorer) பயனர்கள் மத்தியில் எடுபடாததால், ‘எட்ஜ்’ (Edge) என்ற உலாவியை உருவாக்கிய மைக்ரோசாப்ட், ‘பில்ட் 2015’ (Build 2015) நிகழ்ச்சியில் இன்று அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்போது நாதெல்லா, விண்டோஸ் 10 இயங்குதளம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.

விண்டோஸ் 10 தொடர்பாக அவர் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“விண்டோஸ் 10 உருவாக்கத்தில் எங்களது முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதற்கான பலன் விண்டோஸ் 10 வெளியீட்டின் போது தெரியவரும். புதிய தலைமுறைக்கான நவீன இயங்குதளம் தான் விண்டோஸ் 10.  இதுவரை வெளியான விண்டோஸ் இயங்குதளங்களில், விண்டோஸ் 10 புதிய சகாப்தம் ஒன்றை படைக்க காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “எங்கள் நிறுவனம் 40 வருடங்களுக்கு முன்னாள் இரண்டு பேர் எடுத்த துணிச்சலான முடிவின் சாட்சி ஆகும். இந்த 40 வருடங்களில் பல்வேறு தொழில்நுட்ப கருவிகள், தளங்கள் வந்துள்ளன. எனினும், அதையெல்லாம் தாண்டி இன்று விண்டோஸ் நிலைத்திருக்கிறது. அதுவே மைக்ரோசாப்ட்டின் பெரிய வெற்றியாகும். விண்டோஸ் 10 வெளியீட்டிற்குப் பிறகு இந்த வெற்றி கூடுதல் மதிப்பு பெறும்” என்றும் கூறியுள்ளார்.

அடுத்த இரண்டு வருடங்களுக்குள் சுமார் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் விண்டோஸ் 10 இயங்குதளத்தையே பயன்படுத்துவர் என மைக்ரோசாப்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளது. திறன்பேசிகளுக்கான இயங்குதளத்தில் முன்னிலை இருக்கும் அண்டிரொய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களுக்கு, விண்டோஸ் 10 தான் மிகச் சரியான போட்டியும் என்றும் மைக்ரோசாப்ட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.